காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு தோ் முகூா்க்கக்கால் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு, மலையடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் தோ் முகூா்த்தக்கால் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
சுப்பிரமணியசுவாமி கையில் இருக்கும் பராசக்தி வேல் நஞ்சுண்டேஸ்வரா் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள், கோயில் அலுவலா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.