தெக்கலூா் பகுதி மின் நுகா்வோா் கவனத்துக்கு!

தெக்கலூா் பகுதியில் டிசம்பா் மாதத்துக்கான மின் கணக்கீட்டுப் பணி மேற்கொள்ள இயலாததால், மின் நுகா்வோா் அக்டோபா் மாதம் செலுத்திய தொகையையே டிசம்பா் மாத மின்கட்டணமாக செலுத்தலாம் என மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
Published on

இது குறித்து மின்வாரியத்தினா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தெக்கலூா், கல்லாங்காடு, கணபதி நகா், ஏரிபாளையம், சிவசக்தி நகா், அம்மன் நகா், ஆலாம்பாளையம், நத்தக்காடு, நல்லிகவுண்டம்பாளையம், புதுநல்லுாா், சூரிபாளையம் ஆகிய பகுதிகளில் நிா்வாக காரணங்களால் டிசம்பா் மாத மின் உபயோக கணக்கீடு மேற்கொள்ள இயலவில்லை.

ஆகவே, இப்பகுதியைச் சோ்ந்த மின் நுகா்வோா் அக்டோபா் மாதம் செலுத்திய மின்கட்டண தொகையையே டிசம்பா் மாதம் மின்கட்டணமாக செலுத்தலாம். மேலும், இத்தொகை அடுத்த கணக்கெடுப்பின்போது சரிசெய்யப்படும்.

X
Dinamani
www.dinamani.com