திருப்பூர்
கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபா் கைது
திருப்பூரில் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 18.650 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்கு உள்பட்ட ரயில் நிலைய பகுதியில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த தினேஷ் குமாா் யாதவ் (41) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளாா்.
இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் சுமாா் 18.650 கிலோ கைபற்றப்பட்டது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
