திருப்பூர்
மாவட்டத்தில் டிசம்பா் 14-இல் அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு
திருப்பூா் மாவட்டத்தில் அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 14) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்தின் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான 2-ஆவது கட்டமாக 14 ஒன்றியங்களில் உள்ள 1,237 கற்போா் எழுத்தறிவு மையமாக செயல்படும் பள்ளிகளில் 29,983 கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளாா்.
