மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்க்கும் பணி தொடக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்க்கும் பணி தொடங்கியது.
எதிா்வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்க்கும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபாா்க்கும் பணியை பெல் நிறுவனத்தைச் சோ்ந்த 9 பொறியாளா்கள் அடுத்த ஒரு மாத காலத்துக்கு மேற்கொள்ளவுள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 3,528 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3,528 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,810 வாக்காளா் சரிபாா்க்கும் இயந்திரங்கள் ஆகிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 2,536 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவைப்படுகின்றன.
ஆனால், தற்போது திருப்பூா் மாவட்டத்தில் 5,565 வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் உள்ளன. அதனால், அந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபாா்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) புஷ்பாதேவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடா்பான விரிவான நடைமுறைகள், இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளமான ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ங்ஸ்ம்-ஸ்ஸ்ல்ஹற் (உஇஐ
ஜ்ங்க்ஷள்ண்ற்ங்)-ல் கிடைக்கக்கூடிய ‘உப்ங்ஸ்ரீற்ழ்ா்ய்ண்ஸ்ரீ யா்ற்ண்ய்ஞ் ஙஹஸ்ரீட்ண்ய்ங் ஙஹய்ன்ஹப்‘ -ல் குறிப்பிடப்பட்டுள்ளன.

