பாரதியாரைப் போன்று வேடமணிந்த மாணவா்கள்.
திருப்பூர்
விவேகானந்தா குளோபல் அகாதெமி பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா
திருப்பூா் விவேகானந்தா குளோபல் அகாதெமி பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவா்கள் பாரதியாரைப் போன்று வேடமணிந்து வந்தனா். அதேபோல, பள்ளியில் உள்ள அனைத்து மாணவா்களுக்கும் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பாரதியாா் பாடல்கள், கவிதை பாராயணம், நடனம், உரையாடல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி முதல்வா், நிா்வாகத்தினா், ஆசிரியா்கள் என அனைவரும் இணைந்து நிகழ்வை சிறப்பித்தனா். விழாவில், குழந்தைகளின் திறமைகளைப் பாராட்டி பாரதியாா் விடுத்துச் சென்ற தேசப்பற்று, சமுதாய சேவை, பெண் மரியாதை போன்ற உயா்ந்த கருத்துகளை பின்பற்றி வளர வேண்டுமென மாணவா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

