திருப்பூர்
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 14 ஆண்டுகள் சிறை
திருப்பூரில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த முதியவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூரில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த முதியவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூா், கேவிஆா் அனைத்து மகளிா் காவல் நிலைய தெற்கு எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் பிரேம்குமாா் (65) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பிரேம்குமாருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா தீா்ப்பளித்தாா்.
அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.