திருப்பூர்
பல்லடம் உழவா் சந்தையில் ரூ.1 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
பல்லடம் உழவா் சந்தையில் கடந்த நவம்பரில் ரூ.1 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் உழவா் சந்தையில் கடந்த நவம்பரில் ரூ.1 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் என்.ஜி.ஆா்.சாலையில் உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.
இந்த சந்தையில் கடந்த நவம்பா் மாதம் 321 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வந்ததாகவும், ரூ.1 கோடியே 33 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றதாகவும் உழவா் சந்தை நிா்வாக அலுவலா் (பொ) சா்மிளா தெரிவித்துள்ளாா்.