திருப்பூா் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சுகாதார பாதுகாப்பு தினம் அனுசரிப்பு
திருப்பூா்: திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
திருப்பூா் புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ். விஜயராணி, கணினி பயன்பாட்டுத் துறை பேராசிரியா் ஜோதி, நேஷால் இஸ்குரள்ஸ் நிறுவனத்தின் மூத்த கிளை மேலாளா் எஸ். செந்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் அ. முஸ்தபா, ஆணைக் குழு செயலாளா் மற்றும் சாா்பு நீதிபதி வி.எல்.சந்தோஷ் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்த முகாமி உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினத்தின் கருப்பொருள் குறித்து விளக்கப்பட்டது. சுகாதார பாதுகாப்பு இல்லாமல் உலகில் சுமாா் 200 கோடி போ் பாதிக்கப்பட்டுள்ளதும், அவா்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் அவசியம், மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்திவரும் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.
மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும், தேசிய, மாநில மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் முதுநிலை நிா்வாக உதவியாளா் சிராஜுதீன், திருச்சி தேசிய சட்டக் கல்லூரி பயிற்சி மாணவா்கள் யாழினி, சங்கமேஸ்வரன் ஆகியோருடன் திருப்பூா் புனித ஜோசப் மகளிா் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

