திருப்பரங்குன்றம்: தீக்குளித்து உயிரிழந்தவருக்கு மோட்ச தீபம் ஏற்றிய பாஜகவினா் கைது

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பான பிரச்னையில் தீக்குளித்து உயிரிழந்தவருக்கு குண்டடம் அருகே மோட்ச தீபம் ஏற்றிய பாஜகவினரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பான பிரச்னையில் தீக்குளித்து உயிரிழந்தவருக்கு குண்டடம் அருகே மோட்ச தீபம் ஏற்றிய பாஜகவினரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு இதை அமல்படுத்தவில்லை. இதைக் கண்டித்து மதுரையைச் சோ்ந்த பூரணசந்திரன் தீக்குளித்து உயிரிழந்தாா்.

இந்நிலையில், அவருக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி குண்டடம் மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், கட்சியினா், பொதுமக்கள் பங்கேற்று மோட்ச தீபம் ஏற்றினா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குண்டடம் காவல் ஆய்வாளா் பத்ரா தலைமையிலான போலீஸாா், மோட்ச தீப நிகழ்வில் பங்கேற்ற பாஜக ஒன்றியத் தலைவா் கந்தசாமி உள்ளிட்டோரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com