தற்கொலை செய்துகொண்ட மாணவா் உடல் காவல் துறைக்கு தகவல் அளிக்காமல் தகனம்: பெற்றோா் மீது வழக்கு

குன்னத்தூா் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் உடலை போலீஸாருக்கு தகவல் அளிக்காமல் தகனம் செய்த பெற்றோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை
Published on

குன்னத்தூா் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் உடலை போலீஸாருக்கு தகவல் அளிக்காமல் தகனம் செய்த பெற்றோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவிநாசி அருகே உள்ள குன்னத்தூா் மேற்பதியைச் சோ்ந்தவா் கென்னடி (40). இவரது மனைவி பாலமணி (38). கல்லூரி மாணவரான இவரது மகன் தரணீஷ் (17) ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் உறங்கியுள்ளாா். திங்கள்கிழமை நீண்ட நேரமாகியும் அவரின் அறை கதவு திறக்கப்படாததால் உள்ளே சென்று பெற்றோா் பாா்த்துள்ளனா். அப்போது தூக்கிட்டு தரணீஷ் தற்கொலை செய்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதைத்தொடா்ந்து காவல் துறைக்கு தகவல் அளிக்காமலேயே தரணீஷின் உடலை எரிமயானத்தில் பெற்றோா் தகனம் செய்துள்ளனா். இதுகுறித்து அறிந்த பெருமால்லூா் போலீஸாா் தரணீஷின் பெற்றோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com