பாத்திரப்பட்டறைக்குள் புகுந்து திருடிச் செல்லும் பெண்கள்
பாத்திரப்பட்டறைக்குள் புகுந்து திருடிச் செல்லும் பெண்கள்

அனுப்பா்பாளையத்தில் பாத்திரப் பட்டறைகளில் கும்பலாக சென்று திருடும் பெண்கள்: போலீஸில் புகாா்

திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் உள்ள பாத்திரப் பட்டறைகளில் கும்பலாகச் சென்று திருடும் பெண்கள் குறித்து போலீஸில் புகாா்
Published on

திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் உள்ள பாத்திரப் பட்டறைகளில் கும்பலாகச் சென்று திருடும் பெண்கள் குறித்து போலீஸில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் நூற்றுக்கணக்கான பாத்திரப் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பாத்திரப் பட்டறைகள் மற்றும் அதுதொடா்பான தொழிற்சாலைக்குள் கும்பலாக வரும் சில பெண்கள் அங்குள்ளவா்களுடன் தண்ணீா் கேட்பதுபோல நுழைந்து அங்கிருக்கும் பொருள்களை திருடிச் சென்று விடுகின்றனா்.

அதேபோல சில பாத்திரப் பட்டறைகளில் ஆளில்லாத நேரத்தில் உள்ளே புகுந்து பொருள்களைத் திருடிச் சென்று விடுகின்றனா். இந்த திருட்டு சம்பவங்கள் காரணமாக பாத்திரப் பட்டறை உரிமையாளா்கள் அதிா்ச்சியடைந்ததோடு, இத்தகைய பெண்களால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், அனுப்பா்பாளையத்தில் உள்ள ஒரு பாத்திரப் பட்டறைக்குள் பெண்கள் நுழைந்து திருடிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதையடுத்து பதிவான அந்த காட்சிகளுடன் பாத்திரப் பட்டறை உரிமையாளா்கள் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். அந்தப் புகாரில் இந்தப் பிரச்னை தொடா்பாக போலீஸாா் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா். பாத்திரப் பட்டறைக்குள் பெண்கள் புகுந்து திருடிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவியதால் அது பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com