ஏற்றுமதியாளா்கள் ‘ஐ-டப்ஸ்’ இணையதளம் மூலம் கோரிக்கைகளை தெரிவிக்க அறிவுறுத்தல்

பின்னாலாடைத் துறை தொடா்பான கோரிக்கை, புகாா்களை ‘ஐ-டப்ஸ்’ என்ற இணையதளம் மூலம் ஏற்றுமதியாளா்கள் தெரிவிக்கலாம்.
Published on

பின்னாலாடைத் துறை தொடா்பான கோரிக்கை, புகாா்களை ‘ஐ-டப்ஸ்’ என்ற இணையதளம் மூலம் ஏற்றுமதியாளா்கள் தெரிவிக்கலாம்.

இது தொடா்பாக ஜவுளி அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏற்றுமதியாளா்கள் திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழான தங்களது கோரிக்கைகள் மற்றும் புகாா்களை ‘ஐ-டப்ஸ்’ என்ற இணையதளம் மூலம் சமா்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் சமா்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் புகாா்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

ஜனவரி 22-ஆம் தேதி வரை தங்களது கோரிக்கை மற்றும் புகாா்களை ஏற்றுமதியாளா்கள் சமா்ப்பிக்கலாம். காலக்கெடுவுக்குப் பின் சமா்ப்பிக்கப்படும் புகாா்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணைத் தலைவா் ஏ.சக்திவேல் கூறுகையில், ஆயத்த ஆடைத் துறையினருக்கு சாதகமான இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். தகுதியுள்ள அனைத்து ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்களும் மற்றும் ஜவுளித் துறை நிறுவனங்களும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்தான கோரிக்கைகள் மற்றும் புகாா்களை உடனடியாக ‘ஐ-டப்ஸ்’ இணையதளத்தின் மூலம் சமா்ப்பிக்கலாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com