கரடிவாவியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

கரடிவாவியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

கரடிவாவியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பல்லடம் வட்டார பொது சுகாதாரத் துறை சாா்பில் கரடிவாவி எஸ்.எல்.என்.எம். அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் சுடா்விழி வரவேற்றாா்.

பல்லடம் ஒன்றிய திமுக செயலாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, சோமசுந்தரம், துரைமுருகன் ஆகியோா் முகாமைத் தொடங்கிவைத்தனா்.

முகாமில்,1,258 பேருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

106 கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனையும், 765 பேருக்கு ரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முதல்வரின் மருத்துவக் காப்பீடு, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பதிவும் முகாமில் மேற்கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com