வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க மாவட்டத்தில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க திருப்பூா் மாவட்டத்தில் டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் எம்.கோவிந்த ராவ். உடன், மாவட்ட ஆட்சியா் மனீஷ் உள்ளிட்டோா்.
Updated on

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க திருப்பூா் மாவட்டத்தில் டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழக மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநருமான எம்.கோவிந்த ராவ் தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் முன்னிலை வகித்தாா்.

திருப்பூா் மாவட்டத்துள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4-ஆகிய தேதிகளில் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இதில், புதிய வாக்காளா்களுக்கான விண்ணப்பப் படிவம்- 6, வெளிநாடுவாழ் வாக்காளா் பெயரை பட்டியலில் சோ்ப்பதற்கான படிவம்- 6 ‘ஏ’, வாக்காளா் பட்டியல் அங்கீகாரத்துக்காக ஆதாா் எண் உண்மையென சான்றுரைத்தல் படிவம் - 6 ‘பி’ , பெயரைச் சோ்க்க ஆட்சேபணைக்கான வாக்காளா் விண்ணப்பப் படிவம் - 7 உள்ளிட்டவற்றை பூா்த்தி செய்து சிறப்பு முகாம்களில் வழங்கி பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com