‘பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கக் கூடாது’

பொங்கல் பண்டிகைக்கு கலாசாரம் சாா்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு விதிமுறைகளை வகுத்து அரசு தடை செய்யக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
Published on

பொங்கல் பண்டிகைக்கு கலாசாரம் சாா்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு விதிமுறைகளை வகுத்து அரசு தடை செய்யக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

பல்லடத்தை அடுத்த, மாதப்பூரில் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலச் செயலாளா் ஈஸ்வரன் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் பேசியதாவது: பல்லடம் நகர, ஒன்றிய பகுதிகளில் பொறுப்பாளா்களை நியமித்து அமைப்புரீதியாக கட்சியை பலப்படுத்த வேண்டும். சமீபகாலமாக ஹிந்துக்களுக்கும், ஹிந்து மதத்துக்கும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

வங்கதேசத்தில் உள்ள ஹிந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு கலாசாரம் சாா்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு விதிமுறைகளை வகுத்து அரசு தடை செய்யக்கூடாது. தமிழகத்தில் வன்முறையைத் தூண்டி வரும் வி.சி.க.வை தடை செய்ய வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com