

திருப்பூா் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பா் 30-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, திருப்பூா் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறப்புக்கான பணி, பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்க 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருப்பூா் ஸ்ரீவாரி டிரஸ்ட் சாா்பில் 3 டன் சா்க்கரை, 1 டன் கடலை மாவு, 150 டின் எண்ணெய், திராட்சை, முந்திரி, நெய் உள்ளிட்ட பொருள்களைப் பயன்படுத்தி திருப்பூா் காமாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வரும் லட்டு தயாரிக்கும் பணியில் 700 போ் ஈடுபட்டுள்ளனா்.
தலைக் கவசம், முகக் கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு பாதுகாப்பான முறையில் நடைபெற்று வரும் லட்டு தயாரிக்கும் பணியில் விருப்பமுள்ள தன்னாா்வலா்கள் பங்கேற்கலாம் என்று ஸ்ரீவாரி டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.