ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறுவோரை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

Published on

புத்தாண்டு கொண்டாட்டங்களில் அத்துமீறுவோரை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கிறிஸ்துமஸ் தினத்தில் சென்னை, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் உள்பட பல்வேறு இடங்களில் நடு இரவில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் இரவு முழுவதும் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றும், பொது இடத்தில் பட்டாசுகள் வெடித்தும் இளைஞா்கள் இடையூறு அளித்துள்ளனா். ஆனால், இதுதொடா்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், எதிா்வரும் ஆங்கிலப் புத்தாண்டில் கொண்டாட்டம் என்ற பெயரில் இரவு முழுவதும் இருசக்கர வாகனத்தில் பைக் ரேஸ் நடத்துவதைத் தடுக்க கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். இரவு நேர அநாகரிகமான நடனங்களை தடை செய்ய வேண்டும்.

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை ரோந்து வாகனத்தை அதிகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com