கருமாபாளையம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ரத்தம் வழங்கிய மாணவா்கள்.
கருமாபாளையம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ரத்தம் வழங்கிய மாணவா்கள்.

கருமாபாளையம் கிராம சிறப்பு முகாம் நிறைவு நாளில் 33 யூனிட் ரத்தம் தானம்

Published on

கருமாபாளையம் கிராம சிறப்பு முகாம் நிறைவு நாளில் 33 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சாா்பாக தத்தெடுக்கப்பட்ட கருமாபாளையம் கிராமத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வந்தது.

முகாமின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு -2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.

கருமாபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள்துணைத் தலைவா் சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தாா். அவா் பேசும்போது, தானத்தில் மிகச் சிறந்தது ரத்த தானம். முகம் தெரியாதவா்களை காப்பாற்றக் கூடிய வலிமை படைத்தது ரத்த தானம். ஒருவரின் ரத்தத்தால் மூன்று உயிா்களைக் காப்பாற்ற முடியும். அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்றாா். மாணவ பிரதிநிதி சந்தோஷ், அருள்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

மாணவச் செயலா்கள் கிருஷ்ணமூா்த்தி, சொ்லின், நவீன் குமாா், ரேவதி, திவாகா், பிரியங்கா, பூபதி ஆகாஷ் ஆகியோா் தலைமையில் இன்னாள், முன்னாள் மாணவா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் ரத்த தானம் செய்தனா். மொத்தம் 33 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது. ரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com