லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது
Published on

வெள்ளக்கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து, முத்தூா் சாலையில் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அறிவொளி நகா் பிரிவு அருகே மூன்று எண் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக முத்தூா், ஆலாம்பாளையம் பாரதி தெருவைச் சோ்ந்த பழனிசாமி மகன் விமல்குமாா் (33) கைது செய்யப்பட்டாா்.

வெளி மாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச் சீட்டை ரூ.50-க்கு விற்பனை செய்து, குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்தது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com