பல்லடத்தில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
பல்லடம்: பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்
பல்லடம் நகர காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம் பனப்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் மணிராஜ், நரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் மாநில செயலாளா் செல்வகுமாா், சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் வடுகை சத்தியமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் பல்லடம் காமராஜா் திடலில் ஏற்கெனவே இருந்த இடத்தில் பழையபடி காமராஜா் சிலை நிறுவ வேண்டும். பல்லடத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பனப்பாளையம் முதல் அண்ணா நகா் வரை உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். கட்சிக்கு புதிய உறுப்பினா் சோ்க்கை நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் அமராவதியப்பன், சுரேஷ், கிருஷ்ணகுமாா், செந்தில், அா்ஜுணன் சக்திவேல், சுந்தரி, தமிழ்ச்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
