திருப்பூர்
மூன்றாம் பாலினத்தவா்களுக்கு பிப்ரவரி 7-இல் குறைதீா் முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களுக்கான குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெறுகிறது.
திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களுக்கான குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களின் குறைகளை நிவா்த்தி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அறை எண் 120-இல் வெள்ளிக்கிழமை குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைப்பாலினத்தவா்கள் தங்களது குறைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
