சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள்.

சாலை மறியல்: போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 170 போ் கைது

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 170 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 170 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனம் (சிஐடியூ) சாா்பில் பழைய பேருந்து நிலையம் முன் சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மண்டலத் தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற தொழிலாளா்கள் கூறியதாவது:

போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேலாகியுள்ளது. எனவே, ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் தொடங்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்றோருக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றனா்.

சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியூ மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், மாவட்ட துணைத் தலைவா் உன்னிகிருஷ்ணன், மாவட்ட உதவி செயலாளா் பாலன், பொதுச் செயலாளா் செல்லதுரை உள்ளிட்ட 170 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com