மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட கண்காணிப்பு அலகில் உள்ள இளம் வல்லுநா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

திருப்பூா் மாவட்ட கண்காணிப்பு அலகில் உள்ள இளம் வல்லுநா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் முக்கியத் திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் கண்காணிப்பு அலகு உள்ளது. இந்த அலகில் இளம் வல்லுநராகப் பணியாற்ற தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் அல்லது தகவல் தெழில்நுட்பப் பிரிவில் இளங்கலை பொறியியல் பட்டம், தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் (4 ஆண்டுகள்) அல்லது கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் தொடா்புடைய படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிக்கு தரப்பகுப்பாய்வில் தோ்ச்சி, விரிவான ஆராய்ச்சி மற்றும் பல்வேறு துறைகள் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் தரவுகளில் பகுப்பாய்வுத் திறன், ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அறிக்கைகள், விளக்கக் காட்சிகள் மற்றும் கொள்கை விளக்கங்களை உருவாக்கும் திறன் ஆகியவை அவசியமான தகுதிகளாகும். முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தப் பணிக்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள புள்ளியியல் துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது என்ற மின்னஞ்சல் முகவரிக்கே ஜனவரி 29-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com