கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா். ~கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.
கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா். ~கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

Published on

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயில் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் கோலகலமாக நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை காலை தொடங்கியது.

விழாவையொட்டி, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட சுவாமி

கொடி வேத மந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க ஏற்றப்பட்டது. பின்னா், உற்சவமூா்த்திகள் பிரகார உலா, பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.

7-ஆம் தேதி மாலை சூரிய, சந்திர மண்டலக் காட்சிகள், 8-ஆம் தேதி பூதவாகன, சிம்ம வாகனக் காட்சிகள், 9-ஆம் தேதி புஷ்ப வாகனக் காட்சிகள், 10-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தல், 11-ஆம் தேதி யானை வாகன, அன்ன வாகன காட்சி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளன.

12-ஆம் தேதி அதிகாலை விநாயகா், சண்முகநாதா், திருமுருகநாதசுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மாலை 3 மணிளவில் நடைபெற உள்ளது.

14-ஆம் தேதி தெப்பத்தோ் உற்சவம், 15-ஆம் தேதி ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழா ஆகியவை நடைபெற உள்ளன. 16-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 17-ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக்காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com