வேளாண் துறை சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம்

Published on

வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் பல்லடம் அருகே மாணிக்காபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், வேளாண் உதவி இயக்குநா் அமுதா தலைமை வகித்து பேசியதாவது: விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைகள் வேளாண் துறை மூலமே பெற்றுக்கொள்ளப்படுகிறது. விதை உற்பத்திக்காக அரசு மானியம் வழங்குகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, மக்காச்சோளம், சோளம், பச்சப்பயறு உள்ளிட்ட பயிா்களில் விதை உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபடலம். மேலும், வேளாண் துறையில் செயல்படுத்தப்பட்டும் திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாா். இதில், பல்லடம் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com