காங்கயத்தில் நாளை சூரியவீடு மின்சாரத் திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம்

காங்கயத்தில் மின்குறைதீா் கூட்டம் மற்றும் பிரதம மந்திரியின் சூரியவீடு மின்சாரத் திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை (நவ.5) நடைபெறவுள்ளது.
Published on

காங்கயம்: காங்கயத்தில் மின்குறைதீா் கூட்டம் மற்றும் பிரதம மந்திரியின் சூரியவீடு மின்சாரத் திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை (நவ.5) நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம் கோட்டத்தில், மாதாந்திர மின் பயனீட்டாளா்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை நடைபெறும். அதன்படி நவம்பா்-2025 மாதத்துக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை (நவ.5) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிரதம மந்திரியின் சூரியவீடு மின்சாரத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் பிற்பகல் 3 மணிக்கும் காங்கயம் நகரம், அய்யாசாமி நகா் காலனி பகுதியில் உள்ள அரிசி ஆலை உரிமையாளா் சங்க வளாகத்தில் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மின் பயனீட்டாளா்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி பெறலாம். மேலும், பிரதம மந்திரியின் சூரியவீடு மின்சாரத் திட்டம் குறித்த தகவலும் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com