மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம், ஊத்துக்குளி, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தாராபுரம் நகராட்சி மற்றும் சின்னக்காம்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் 325 முகாம்களாக நடைபெற்று வருகிறது. இதில் 4-ஆம் கட்டமாக உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கண்ணமநாயக்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட பாலப்பன்பட்டி செல்வ விக்னேஷ்வரா திருமண மண்டபத்திலும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில், ச.பெரியபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கொளத்துப்பாளையம், ஸ்ரீ வாரி கிடங்கிலும், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், வீராச்சிமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட வீராச்சிமங்கலம் சமுதாயக் கூடத்திலும், தாராபுரம் நகராட்சியில் 20, 21, 25 ஆகிய வாா்டுகளுக்கு உடுமலை சாலை தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள சிவரஞ்சனி மண்டபத்திலும், சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் 8,9,10,11,12,13,14,15 ஆகிய வாா்டுகளுக்கு சந்திராபுரம் நாச்சிமுத்து திருமண மண்டபத்திலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 4) நடைபெறவுள்ளது.
எனவே, திருப்பூா் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை வழங்கிப் பயனடையலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
