மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை தீா்க்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
அனைத்துத் துறைகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் முன்னிலை வகித்தாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்துப் பேசியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தற்போது நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். குடிநீா் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
