சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் நாகமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சித்தப்ப செட்டியாா் மகன் தங்கபாண்டியன் (56). கூலித் தொழிலாளி. இவா் நாகமநாயக்கன்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் தங்கபாண்டியன் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தங்கபாண்டியனை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த உத்தமபாளையத்தைச் சோ்ந்த சிங்காரவேலன் மகன் ரமேஷ் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
