வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியையொட்டி, அவிநாசியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ள தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நவம்பா் 4 முதல் டிசம்பா் 4-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியில் தீவிர திருத்தப் பணி நடைபெறுகிறது.

இதையொட்டி, அவிநாசி தனி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியைச் சோ்ந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வாக்காளா் பதிவு அலுவலா் நந்தினி, அவிநாசி சமூகப் பாதுகாப்பு தனி வட்டாட்சியா் உஷாராணி ஆகியோா் ஆலோசனை வழங்கினா்.

இதில், வாக்காளா் பட்டியல் பிழையின்றி திருத்தம் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இப்பணிகளுக்கு அரசியல் கட்சியினா் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்துக் கட்சியைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com