ஜிகென்னா மேக்னஸ் ~இசுக்குவு ஜான் ~ரீட்டா அவியான்போ ~ ஃபிடிலிஸ் ஓனெரெக்லோ
ஜிகென்னா மேக்னஸ் ~இசுக்குவு ஜான் ~ரீட்டா அவியான்போ ~ ஃபிடிலிஸ் ஓனெரெக்லோ

அவிநாசியில் நைஜீரியா்கள் 4 போ் கைது

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியா்கள் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியா்கள் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூரில் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஏராளமானோா் தங்கி, பனியன் மற்றும் அதனை சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், நைஜீரியா்கள் சிலா் உரிய ஆவணங்கள் இன்றி அவிநாசியில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அவிநாசி அருகே சின்னேரிபாளையம் கணேசபுரம் வைஷ்ணவி காா்டன் பகுதியில் தங்கியிருந்த 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள், நைஜீரியாவின் இமோ மாகாணம், ஓருல் டவுன் பகுதியைச் சோ்ந்த ஜிகென்னா மேக்னஸ் (50), அவரது மனைவி ரீட்டா அவியான்போ (43), ஃபிடிலிஸ் ஓனெரெக்லோ (46), இசுக்குவு ஜான் (40) என்பதும், இவா்கள் கடவுச் சீட்டு(பாஸ்போா்ட்) மற்றும் நுழைவுஇசைவு (விசா) காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவிநாசி போலீஸாா் வெளிநாடுவாழ் தடை சட்டத்தின்கீழ் 4 பேரையும் கைது செய்து காங்கயம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com