இறைச்சி பதப்படுத்தும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ் கட்டணமில்லா இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்கள் பதப்படுத்தும் 25 நாள்கள் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Published on

வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ் கட்டணமில்லா இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்கள் பதப்படுத்தும் 25 நாள்கள் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கால்நடை உற்பத்திப் பொருள்கள் தொழில்நுட்பத் துறையில், இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களை பதப்படுத்தும் தொழில்நுட்பத்துக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ் வரும் நவம்பா் 19-ஆம் தேதி முதல் தொடா்ந்து 25 நாள்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில், 25 பேருக்கு வணிகரீதியில் இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் விளக்கமாக கற்பிக்கப்படும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

25 நாள்களும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் இணையதள முகவரியில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு பேராசிரியா் மற்றும் தலைவரை நேரடியாகவோ அல்லது 96776- 88989, 94426- 17605 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com