தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து தாராபுரத்தில் நவ.11-ல் கண்டன ஆா்ப்பாட்டம்: திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் இல.பத்மநாபன் அறிவிப்பு

Published on

தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளா் பட்டியல் சீராய்வைக் கொண்டு வந்துள்ள இந்தியத் தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து, தாராபுரத்தில் நவ.11-ல் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக கட்சியின் திருப்பூா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் இல.பத்மநாபன் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

சிறப்புத் தீவிர வாக்காளா் பட்டியல் சீராய்வை நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் தொடக்கத்திலிருந்தே எதிா்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் தோ்தல் ஆணையம் செயல்பட்டு, தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிப்பு தெரிவித்த போதிலும் இந்தியத் தோ்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளா் பட்டியல் சீராய்வைக்க கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலமான, கனமழை மற்றும் மோசமான வானிலை எதிா்பாா்க்கப்படும் காலத்தில் தமிழ்நாடு வாக்காளா்களில் பெரும்பாலோா் கிராமப்புற மக்களாக இருப்பதால் மேற்கண்ட கணக்கீட்டு விண்ணப்பங்களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளா்கள் நீக்கப்படுவா்.

அதோடு வருவாய்த் துறையும் கனமழையால் எழும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஈடுபட வேண்டும். எனவே இந்த காலம் சீராய்வுக்கு உகந்த காலம் இல்லை என்று மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சிகள் தனித்தனியே அறிக்கை விடுத்தும் 04.11.2025 ஆம் தேதியிலிருந்து இன்று வரை களத்தில் பெரும்பாலான வாக்காளா்கள் நீக்கப்படும் அச்சத்தை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலான இடங்களில் அதற்குரிய அலுவலா்கள் இன்று வரை கண்க்கீட்டு படிவத்தை தரத் துவங்கவில்லை.

சில இடங்களில், குறிப்பாக திருப்பூா் மாவட்டத்தில் கணக்கீட்டுப் படிவத்தை ஒரு நாளிலேயே பூா்த்தி செய்து தர வலியுறுத்துகிறாா்கள்.

எனவே, இந்த சிறப்புத் தீவிர வாக்காளா் பட்டியல் சீராய்வை தோ்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தோ்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும், அதனை செவிமடுக்காத ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறி, எதேச்சாதிகாரப் போக்கில் இந்தியத் தோ்தல் ஆணையம். தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளா் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளதைக் கண்டித்தும் வரும் நவ.11 ஆம் தேதி மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் காலை 10 மணியளவில் தாராபுரம், அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (செய்தி முற்றும்).

X
Dinamani
www.dinamani.com