திருப்பூர்
முத்தூரில் தேங்காய், கொப்பரை ஏலம்
முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு, 12,639 தேங்காய்கள் வரத்து இருந்தது. எடை 4,873 கிலோ. கிலோ ரூ. 58.55 முதல் ரூ. 75.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 68.20. விற்பனைத் தொகை ரூ. 3.16 லட்சம்.
24 மூட்டைகள் கொப்பரை( தேங்காய்ப் பருப்பு) வரத்து இருந்தது. எடை 355 கிலோ. கிலோ ரூ. 135.00 முதல் ரூ. 217.35 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 212.70. விற்பனைத் தொகை ரூ. 67 ஆயிரம்.
மொத்தம் 66 விவசாயிகள், 9 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 3.83 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் து.சங்கீதா தெரிவித்தாா்.
