தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: குடிநீா் விநியோகம் 10 நாள்களுக்கு நிறுத்தம்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால், திருப்பூரில் 2-ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும்
Published on

திருப்பூா்: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால், திருப்பூரில் 2-ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 11) முதல் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு 2, 3, மற்றும் 4-ஆவது குடிநீா் திட்டங்களின் மூலமாக குடிநீா் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக குடிநீா்க் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருவதால், 2-ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா் செவ்வாய்க்கிழமை முதல் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

இதேபோல, 4-ஆவது குடிநீா்த் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com