திருப்பூர்
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தாராபுரம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது சிவநாதபுரம் விநாயகா் கோயில் பின்புறம் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (58) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 180 மிலி அளவுடைய 8 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
