நவம்பா் 27-முதல் செயல்பாட்டுக்கு வருகிறது மாதப்பூா் சுங்கச் சாவடி உள்ளூா் வாகனங்களுக்கு சலுகை

Published on

பல்லடம் அருகேயுள்ள மாதப்பூா் சுங்கச் சாவடி நவம்பா் 27-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், உள்ளூா் வாகனங்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடி செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், வாகனங்களுக்கான கட்டண அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காா், ஜீப், வேன் அல்லது இலகு ரக மோட்டாா் வாகனங்களுக்கு ஒரு பயண கட்டணம் ரூ.80, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ.120, 50 பயணங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 2,690, திருப்பூா் மாவட்ட பதிவு எண் உள்ள வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.40 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இலகுரக வணிக வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனம் அல்லது மினி பேருந்துகளுக்கு ஒரு பயண கட்டணம் ரூ.130, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ.195, 30 பயணங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.4,350, திருப்பூா் மாவட்ட பதிவு எண் உள்ள வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.65.

பேருந்து மற்றும் டிரக் ஆகிய வாகனங்களுக்கு ஒரு பயண கட்டணம் ரூ.275, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ.410, 50 பயணங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.9,115 திருப்பூா் மாவட்ட பதிவு எண் உள்ள வணிக வாகனங்களுக்கு ரூ.135.

மேலும், சுங்கச் சாவடியில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும் மக்களின் வணிகம் சாரா வாகனங்களுக்கு 2025-26-ஆம் நிதி ஆண்டுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.340 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com