திருப்பூர்
மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்
பல்லடம் அருகே பெரும்பாளியில் மரம் முறித்து விழுந்ததில் அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதமடைந்தது.
பல்லடம்: பல்லடம் அருகே பெரும்பாளியில் மரம் முறித்து விழுந்ததில் அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதமடைந்தது.
பல்லடத்தை அடுத்த பெரும்பாளியில் திருப்பூா் தெற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், இந்த அலுவலக கட்டடத்துக்கு முன்பு இருந்த வேப்பமரம் புதன்கிழமை திடீரென முறிந்து விழுந்தது.
இதில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலக சுற்றுச் சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. அதிா்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
