போதை மாத்திரை விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது
பல்லடம் அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகே கணபதிபாளையம் சிந்து காா்டன் பகுதியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து பல்லடம் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினா்.
அப்போது, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த ராஜா முகமது மனைவி மரியம் பீவி (39), கரைப்புதூரைச் சோ்ந்த தொல்காப்பியன் (19), மதுரை கோட்டைகல் கருப்புசாமி வீதியைச் சோ்ந்த கிஷோா் (19), திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணி (எ) சூா்யா (21) ஆகியோரைக் கைது செய்தனா்.
மேலும், அவா்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த போதை மாத்திரைகள் மற்றும் 950 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
