திருப்பூர்
லாட்டரி விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் முத்தூா் சாலையில் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்தனா். விசாரணையில், அவா் முத்தூா், பெருமாள்புதூரைச் சோ்ந்த செந்தில் (58) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, செந்திலைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.
