நாளைய மின்தடை: காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (அக்.27) மின் விநியோகம் நிறுத்தம்
Published on

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

காடையூா் துணை மின் நிலையம்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு.

ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டுவலசு.

பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.

X
Dinamani
www.dinamani.com