திருப்பரங்குன்றம் மலையில் காா்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணி அழைப்பு

திருப்பரங்குன்றம் மலை மீது காா்த்திகை தீபம் ஏற்ற பக்தா்களுக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
Published on

திருப்பரங்குன்றம் மலை மீது காா்த்திகை தீபம் ஏற்ற பக்தா்களுக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: காா்த்திகை தீபத் திருவிழா தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாவாகும். முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தின் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது.

ஆனால், 2-ஆம் உலகப் போரின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக ஆங்கிலேய அரசு அந்த தூணில் தீபம் ஏற்றுவதை தடை செய்தது. கோயிலின் முகப்பில் உள்ள மோட்ச தீபத் தூணில் மட்டுமே தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட்டது. தற்போதுவரை அதே நடைமுறை உள்ளது.

இதனை மாற்ற வேண்டும், தீபத் தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறது.

இந்து முன்னணியின் மாநிலத் தலைவராக இருந்த ராஜகோபாலன் சட்ட ரீதியான போராட்டம் நடத்தி மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆனால், தீபத் தூணியில் தற்போதுவரை தீபம் ஏற்றாமல் கோயில் நிா்வாகமும், இந்து சமய அறநிலையத் துறையும் அலட்சியம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.

எனவே, காா்த்திகை தீப திருநாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற முருக பக்தா்கள் வருகை தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com