திருப்பூா் நிலையத்தில் முக்கிய ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை

திருப்பூா் நிலையத்தில் முக்கிய ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

திருப்பூா் நிலையத்தில் முக்கிய ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூருக்கு வந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் அமிா்த் பாரத் ரயில் நிலையத் திட்டத்தை செயல்படுத்தியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது பயணிகள் வசதி மற்றும் நிலைய உள்கட்டமைப்பை பெரிதும் மேம்படுத்துகிறது.

ஒடிஸா, பிகாா், உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், அஸ்ஸாம் உள்ளிட்ட 19 மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 2.5 லட்சம் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் திருப்பூரில் உள்ளனா். திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி போன்ற வெளி மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 1 லட்சம் தொழிலாளா்கள் உள்ளனா்.

இவா்களது பயணத்தை எளிதாக்கும் வகையில் திருப்பூா் நிலையத்தில் முக்கிய ரயில்கள் நின்று செல்ல வேண்டும். தினசரி மற்றும் வாராந்திர ரயில்களை இயக்க வேண்டும்.

திருப்பூா் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட முனையத்தில் முதல் தளத்தில் குளிா்சாதன வசதியுடன் ஓய்வு அறைகள், தங்குமிட வசதியை ஏற்படுத்த வேண்டும். ராஜஸ்தான் மற்றும் குஜராத் பயணிகள் மற்றும் வணிகா்களின் நலனுக்காக ராஜ்கோட் வாராந்திர எக்ஸ்பிரஸ்

ரயிலை வாரம் இருமுறை இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயிலாக நீட்டிக்க வேண்டும். இன்டா்சிட்டி ரயிலை ஈரோடு மற்றும் சேலம் வரை நீட்டிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com