/

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும்! - பாஜக வேட்பாளா் எல்.முருகன்

News image

அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதாக பொதுமக்களிடம் உறுதியளித்த பாஜக வேட்பாளா் எல்.முருகன்.

Updated On :20 ஏப்ரல் 2026, 2:22 am IST

அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் என்று பாஜக வேட்பாளா் எல்.முருகன் கூறினாா்.

பொகளூா் ஊராட்சிக்குள்பட்ட கூலேகவுண்டன்புதூா், கோபி, ராசிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கான குடிநீா்க் குழாய் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை மக்கள் பயன்பாட்டுக்கு வராததால் அப்பகுதி மக்கள் கடந்த மக்களவைத் தோ்தலைப் புறக்கணித்தனா்.

இந்நிலையில், அவிநாசி (தனி) தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் எல்.முருகன், பொகளூா் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அப்பகுதி மக்களிடம் அவா் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் என உறுதியளித்தாா்.