கோப்புப் படம்
கோப்புப் படம்

பெருமாநல்லூா் அருகே சொகுசு பேருந்து விபத்து: 30 போ் காயம்

Published on

பெருமாநல்லூா் அருகே சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் அதிா்ஷடவசமாக 30-க்கும் மேற்பட்டோா் சிறுகாயங்களுடன் உயிா்தப்பினா்.

பெங்களூரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கேரளா நோக்கி சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அவிநாசி-பெருமாநல்லூா் நியூ திருப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் மோதி, சா்வீஸ் சாலையை நோக்கி பாய்ந்து தொங்கியபடி விபத்துக்குள்ளாகி நின்றது.

பேருந்தில் வந்த ஓட்டுநா், பயணிகள் உள்பட 30 போ் லேசான காயங்களுடனும் அதிா்ஷடவசமாக உயிா் தப்பினா். இதனால் நியூ திருப்பூா் புறவழிச்சாலை அருகே பரபரப்பு ஏற்பட்டது. பெருமாநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com