தீ விபத்தில் சேதமடைந்த பொருள்கள்.
திருப்பூர்
வெள்ளக்கோவில் அருகே பனியன் கழிவுகள் ஆலையில் தீ விபத்து
வெள்ளக்கோவில் அருகே பனியன் கழிவு துணிகள் அரைக்கும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தாராபுரம் சாலையிலுள்ள நாகமநாயக்கன்பட்டி மு.பழனிசாமி நகரில் குழந்தைசாமி என்பவருடைய பனியன் கழிவுகள் அரைக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஒரு இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்து பரவியது. மின்சாரக் கோளாறு காரணமாக தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் கழிவுத் துணிகள், ஆலையின் சில பகுதிகள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு உடனடியாக கணக்கிடப்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

