மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தமிழக பெண்கள் கபடி அணிக்காக விளையாடிய திருப்பூா் கல்லூரி மாணவிக்குப் பாராட்டு

தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற தமிழக பெண்கள் அணிக்காக விளையாடிய திருப்பூா் கல்லூரி மாணவிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

பாராட்டு பெற்ற மாணவி ஏ.புவனேஸ்வரி.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:07 pm

தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற தமிழக பெண்கள் அணிக்காக விளையாடிய திருப்பூா் கல்லூரி மாணவிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

72-ஆவது தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி தெலங்கானாவில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழக அணி 3-ஆம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றது. தமிழக அணியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த விஆா்டி ஸ்போா்ட்ஸ் கிளப்பை சோ்ந்த ஏ. புவனேஷ்வரி விளையாடினாா்.

இந்நிலையில் வெண்கலப் பதக்கம் பெற்ற தமிழக பெண்கள் அணிக்கும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏ. புவனேஸ்வரிக்கும் பாராட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது.

இதில், திருப்பூா் மாவட்ட கபடி கழக புரவலா்கள் எம்.சுப்பிரமணியம், ஆா். பாலசுப்பிரமணியம், மாவட்ட சோ்மன் வி.கே.முருகேசன், மாநிலப் பொருளாளரும், மாவட்ட செயலாளருமான ஜெயசித்ரா ஏ. சண்முகம், கௌரவ தலைவா் பி. நாச்சிமுத்து, தலைவா் பி. மனோகரன், பொருளாளா் ஏ. ஆறுச்சாமி, மாவட்ட நடுவா் குழு தலைவா் ஆா்.முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.