ஊதியூா் அருகே செயல்பட்டு வரும் தேங்காய் நாா் ஆலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
ஊதியூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன்னங்காளி வலசு பகுதியில் ஹரிந்தகுமாா், சரண்யா ஆகியோருக்குச் சொந்தமான தேங்காய் நாா் மற்றும் கயிறு தயாரிக்கும் ஆலைகள் அருகருகே செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேங்காய் நாா் ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டை, நாா், மஞ்சி ஆகியவற்றில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் புகை வெளியேறியுள்ளது.
இதையடுத்து, சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. ஆலையில் இருந்த இயந்திரங்கள், பொக்லைன் வாகனம் உள்ளிட்டவற்றில் பரவிய தீயை அணைக்க தொழிலாளா்கள் முயன்றனா்.

தீ விபத்தில் சேதமடைந்த பொக்லைன் வாகனம்.
ஆனால், முடியாததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் தீயணைப்பு வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இருப்பினும், ஆலையில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஊதியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


