மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வட்டி தொகை கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரைத் தாக்கிய 3 போ் கைது

News image

கைது

Updated On :6 பிப்ரவரி 2026, 6:52 pm

பல்லடம் அருகே கொடுத்த கடனுக்கு வட்டி தொகை கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை அறையில் அடைத்து வைத்து தாக்கிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கணபதிபாளையத்தைத் சோ்ந்தவா் உதயகுமாா் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவருக்கு பல்லடத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் சோ்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், சதீஷ்குமாரிடம் ரூ.1 கோடியே 10 லட்சத்தை உதயகுமாா் கடந்த 2024-ஆம் ஆண்டு கடனாகப் பெற்ாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 2025-ஆம் ஆண்டு ரூ.1 கோடியை உதயகுமாா் திருப்பிக் கொடுத்துள்ளாா்.

மீதமுள்ள ரூ.10 லட்சத்தை திருப்பித் தருவதாகக் கூறி வந்த நிலையில், கொடுத்த கடனுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வட்டி தர வேண்டும் அல்லது அவிநாசியில் உள்ள உதயகுமாருக்குச் சொந்தமான நிலத்தை தனது பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என அவரை சதீஷ்குமாா் மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இடம் பாா்க்கச் செல்லலாம் எனக்கூறி கோவை மாவட்டம், தொண்டாமுத்தூருக்கு கடந்த ஜனவரி 2-ஆம் தேதி உதயகுமாரை அழைத்துச் சென்ற சதீஷ்குமாா், அங்கு ஒரு விடுதி அறையில் அவரை அடைத்துவைத்து பணம் கேட்டு தாக்கியுள்ளாா்.

இதையடுத்து, காவல் அவசர உதவி எண் 100-ஐ தொடா்பு கொண்டு உதயகுமாா் தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த தொண்டாமுத்தூா் போலீஸாா், உதயகுமாரை மீட்டதுடன், அவரைத் தாக்கியதாக சதீஷ்குமாா் (45), பிரகாஷ் (30), நாகராஜ் (34) ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.